தக்காளி

தக்காளி

5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

8.0032.00

 

 

Clear
SKU: N/A Categories: ,

Share this product

Description

தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்

தக்காளியில் அடங்கியுள்ள சத்துக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

பளபளப்பான சருமத்திற்கு

தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

உறுதியான எலும்புகள்

வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் நாம் தவிர்க்கலாம்.

நீரிழிவு

தக்காளியில் உள்ள குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க

தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கண் பார்வைக்கு

தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும்

தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது. விதையை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்று சில ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மென்மையான கூந்தலுக்கு

தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. தக்காளி சாப்பிடுவதால் நம் கூந்தலானது வளர்ச்சியடையாது. ஆனாலும் நமக்கு இருக்கும் கூந்தலானது அழகாக மாறும்.

கடுமையான வலி

சிலருக்கு முதுகு எலும்பும், தோள்பட்டை களிலும் கடுமையான வலி ஏற்படும். இப்படிப்பட்ட வழியினை நீக்க தக்காளி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பயோஃபிளேவோனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் வலி ஏற்படாமல் தடுக்கின்றது.

உடல் எடையை குறைக்க

தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. இதனால் நம் உடல் எடையை குறைக்க இது உதவியாக உள்ளது. தக்காளி கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருக்கிறது. இதனால் எடையை குறைக்க டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது.

தக்காளியில் சில அழகு டிப்ஸ்

உங்களின் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும். தக்காளி விழுதுடன் சிறிதளவு ரவை சேர்த்து உங்கள் முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்கள் முகம் அழகாக ஜொலிக்கும்.

உங்கள் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைய தக்காளி பேஸ்ட்டுடன், உருளைக்கிழங்கு சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். உங்கள் முகம் சப்பையான தோற்றத்தை விட்டு, பூசினால் போல் தோற்றமுடைய தக்காளியை தோல், விதை நீக்கி விட்டு விழுதாக தயார் செய்து கொள்ளவும்.  முகத்தில் ஆலிவ் ஆயிலை முதலில் தடவிக்கொள்ள வேண்டும். பின்பு இந்த தக்காளி விழுதை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவி விடலாம். இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

Additional information

Weight N/A
Grams

250, 500, 1000

1 review for தக்காளி

  1. Nivetha jenifer

    Tomatos are fresh ♥️all veggies are fresh love to order ♥️

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Product is avaialble in below zipcode areas.
627001 627002 627004 627005 627006 627007 627008 627011 627351 627356 627357 627604
No more offers for this product!